Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தோனேசியா: பிளாஸ்டிக் போத்தல்களில் கடத்தப்பட்ட கிளிகள் மீட்பு

இந்தோனேசியாவின் பாப்புவா வட்டாரத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களில் கிளிகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

வாசிப்புநேரம் -

இந்தோனேசியாவின் பாப்புவா வட்டாரத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களில் கிளிகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது.

ஃபாக்ஃபாக் (Fakfak) எனும் ஊரில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பலில் சோதனை நடத்திய அதிகாரிகள் போத்தல்களில் திணித்து வைக்கப்பட்டிருந்த பல கிளிகளை மீட்டனர்.

கப்பலில் ஊழியர்கள், பெரிய பெட்டி ஒன்றிலிருந்து விநோதமான சத்தங்கள் வருவதாகக் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர்.

பெட்டியைத் திறந்து பார்த்தால், உள்ளே உயிருடன் 64 கிளிகள்!

அவை Black-capped lories என்ற வகையைச் சேர்ந்தவை.

மேலும் 10 கிளிகள் மாண்டுகிடக்கக் காணப்பட்டன.

கிளிகள் எந்த இடத்துக்கு, யாரால் கடத்தப்பட்டன என்பது குறித்துத் தகவல் இல்லை.

இந்தோனேசியக் காடுகளில் அழியக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கும் சுமார் 130 வகைப் பறவைகள் உள்ளன.

அவற்றைக் கடத்தி, சட்டவிரோதமாக விற்கும் போக்கு அங்கு அதிகம்.

2017ஆம் ஆண்டில், வடிகால் குழாய்களில் திணிக்கப்பட்டிருந்த சுமார் 125 அரிய வகைப் பறவைகளை இந்தோனேசிய அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்