Images
  • idris
    (படம்:  Bernama)

"திருநங்கையருடன் பெண்கள் கழிவறைகளைப் பகிர்ந்துகொள்வது அபாயகரமானது" : மலேசியாவின் பாஸ் கட்சி

கோலாலம்பூர்: திருநங்கையருடன் பெண்கள் கழிவறைகளைப் பகிர்ந்துகொள்வது அபாயகரமானது என்று கூறியுள்ளார் மலேசியாவின் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் இட்ரிஸ் அஹ்மது.

திருநங்கையர்களுக்கு ஆண்களைப் போல உடல் வலிமை இருப்பதால் அது கழிவறைகளில் பெண்களுக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்றார்.

பாஸ் கட்சியின் 58வது மாநாட்டில் அவர் அவ்வாறு தமது கருத்துகளைத் தெரிவித்தார். அவரின் உரை Facebookக்கிலும் நேரடியாக இடம்பெற்றது.

பெண்களும் திருநங்கையரும் கழிவறைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று இதற்கு முன் மலேசிய அமைச்சர் ஒருவர் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறினார்.

திரங்காணுவின் ஷரியா நீதிமன்றம் ஓரினச் சேர்க்கை காதலிகளுக்கு பிரம்படி கொடுத்ததை எதிர்த்து பேசியவர்கள், அந்த தண்டனை சட்ட நீதிமன்றத்தில் விதிக்கப்பட்ட போது எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்று திரு இட்ரிஸ் குறைக்கூறினார்.
 

Top