Images
  • Pasir Gudang (1)
    (படம்: Bernama)

பாசிர் கூடாங் நச்சுவாயுக் கசிவு - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,900 ஐத் தாண்டியது


பாசிர் கூடாங் நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,900ஐத் தாண்டிவிட்டதாக மலேசிய தேசியப் பேரிடர் நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

390 பேர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

மார்ச் 7 அன்று இரண்டு பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் மூச்சுப் பிரச்சினை, வாந்தி, மயக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதிலிருந்து நச்சுவாயுக் கசிவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

நச்சுவாயுக் கசிவு காரணமாகப் பாசிர் கூடாங் வட்டாரத்தில் இருக்கும் 111 பள்ளிகளை மூடுமாறு மலேசியக் கல்வியமைச்சு நேற்று (மார்ச் 14) உத்தரவிட்டது.

சட்டவிரோதமாக ஆற்றில் கொட்டப்பட்ட நச்சுக் கழிவே சம்பவத்திற்குக் காரணம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் பேசப்பட்டபோது ஜொகூர் பாருவில் அவசர நிலை அறிவிக்கப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹஸ்ஸான் அப்துல் கரீம் கேட்டுக்கொண்டார். ஆனால், நிலைமையின் தீவிரம் குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகத் துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் பதிலளித்தார்.

மண்ணில் கலந்திருந்த 2.4 டன் நச்சுக் கழிவை இதுவரை நீக்கி விட்டதாக அதிகாரிகள் கூறினர்.

 

Top