Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாசிர் கூடாங்கில் சட்டவிரோதமாக இயங்கிய 3 ஆலைகளை அதிகாரிகள் மூடினர்

பாசிர் கூடாங்கில் சட்டவிரோதமாக இயங்கிய 3 ஆலைகளை மலேசிய அதிகாரிகள் மூடினர்.

வாசிப்புநேரம் -
பாசிர் கூடாங்கில் சட்டவிரோதமாக இயங்கிய 3 ஆலைகளை அதிகாரிகள் மூடினர்

(படம்: Bernama)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பாசிர் கூடாங்கில் சட்டவிரோதமாக இயங்கிய 3 ஆலைகளை மலேசிய அதிகாரிகள் மூடினர்.

அண்மையில் அந்த வட்டாரத்தில் ஏற்பட்ட தூய்மைகேட்டுச் சம்பவங்களைத் தொடர்ந்து நேற்று அதிகாரிகள் ஆலைகளில் திடீர்ச்சோதனைகளை மேற்கொண்டனர்.

மூடப்பட்ட ஆலைகளில் இருந்து கருவிகள் கைப்பற்றப்பட்டதாகவும், அந்த ஆலைகளுக்கு மின்சார விநியோகம் தடைசெய்யப் பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறினர்.

கிட்டத்தட்ட 248 ஆலைகளில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், அந்நடவடிக்கை தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த மாதம் பாசிர் கூடாங் வட்டாரத்தில் ஏற்பட்ட தூய்மைகேட்டுச் சம்பவத்தால் 1000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உடல்நலக் கோளாற்றால் பாதிக்கப்பட்டனர். அதன் பின்னர் 3 நாள்கள் பள்ளிகள் மூடப்பட்டன.

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்