Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாசிர் கூடாங் ரசாயனக் கழிவுச் சம்பவம்: மேலும் 2 சந்தேக நபர்கள் கைது

மலேசியாவின் பாசிர் கூடாங் வட்டாரத்தில் உள்ள கிம்-கிம் ஆற்றில் ரசாயனக் கழிவுகளைக் கொட்டிய சந்தேகத்தின்பேரில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -
பாசிர் கூடாங் ரசாயனக் கழிவுச் சம்பவம்: மேலும் 2 சந்தேக நபர்கள் கைது

படம்: Bernama

மலேசியாவின் பாசிர் கூடாங் வட்டாரத்தில் உள்ள கிம்-கிம் ஆற்றில் ரசாயனக் கழிவுகளைக் கொட்டிய சந்தேகத்தின்பேரில் மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் ஆலையுடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படுகிறது.
அவர்கள் லாரியைப் பயன்படுத்தி ரசாயனக் கழிவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டுசென்றிருக்கலாம் என ஜொகூர் மாநிலத் தலைமைக் காவல் அதிகாரி தெரிவித்தார். அந்த லாரியும் பிடிபட்டிருப்பதாய் அவர் சொன்னார்.

நச்சு ரசாயனக் கழிவு கலந்ததால், 4,000க்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக MALAY MAIL நாளேடு தெரிவித்தது.

சம்பவத்தின் தொடர்பில் இதுவரை மொத்தம் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் நாளேடு குறிப்பிட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்