Images
  • qr

சிங்கப்பூரின் கட்டணச் செயலி PayNow இந்தியாவின் UPI செயலியுடன் அடுத்த ஆண்டு இணையவுள்ளது

சிங்கப்பூரின் PayNow, இந்தியாவின் UPI ஆகிய கட்டணச் செயலிகளுக்கு இடையே அடுத்த ஆண்டு புதிய இணைப்பு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நாணய வாரியமும், இந்திய மத்திய வங்கியும் (RBI) அது பற்றிக் கூட்டாக அறிவித்தன.

PayNow - UPI இணைப்பின் மூலம் பயனீட்டாளர்கள் உடனுக்குடன், எளிதாக, குறைந்த கட்டணத்தில் இரு நாடுகளுக்கும் இடையே இணையப் பணப் பரிவர்த்தனை செய்யலாம்.

நாடுகளுக்கு இடையில் விரைவான, எளிமையான, தெளிவான பணப் பரிவர்த்தனைக்கு வழிவகுப்பது G20 அமைப்பின் கோட்பாடுகளில் ஒன்று.

அதன் மூலம் சிங்கப்பூரையும் இந்தியாவையும் நிதி சார்ந்த வகையில் இணைக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

PayNow-UPI இணைப்பு ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்யும் போதும், பணம் அனுப்பும் போதும், தடையின்றி விரைவில் செயல்படலாம்.

இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் உள்ள வர்த்தகங்களுக்கிடையே பணப் பரிவர்த்தனை சுலபமாக, சிக்கலின்றி நடக்க PayNow-UPI இணைப்பு வழிவகுக்கும் என்றும் நம்பப்படுகிறது.   

Top