Images
  • PD up

போர்ட் டிக்சன் இடைத்தேர்தல் : அன்வார் இப்ராஹிம் முன்னிலை

போர்ட் டிக்சன் இடைத்தேர்தலில், பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளரான திரு. அன்வார் இப்ராஹிம் தற்போதைய நிலவரப்படி 10,615 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டாம் இடத்தில் உள்ள பாஸ் கட்சியின் நஸாரி மொக்தார் 3,087 வாக்குகள் பெற்றுள்ளார்.

இரவு 7 மணி நிலவரப்படி 15,294 வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.

Top