Images
  • fish
    (படம்: Reuters)

மலேசியா: தண்ணீர்த் தூய்மைக்கேட்டால் 50,000 மீன்கள் மரணம்

பினாங்கு மாநிலத்தின் தெலுக் பஹாங் பகுதியில் சுமார் 50,000 மீன்கள் தண்ணீர்த் தூய்மைக்கேட்டால் மடிந்தன.

உலோகத் தாது அளவுக்கு அதிகமாக நீரில் கலந்திருந்தது அதற்குக் காரணம்.

உயிர்வாயுவின் அளவு வெகுவாகக் குறைந்தது. அதன் காரணமாக மீன்கள் மடிந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அதனால் மீன்களை வளர்ப்போருக்கு சுமார் 800,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுக் பஹாங்கில் இதுபோன்று மீன்கள் மடிவது இது இரண்டாவது முறை.

சென்ற மே மாதம் ஆயிரக்கணக்கான மீன்கள் கூண்டுகளில் மாண்டுகிடக்கக் காணப்பட்டன.
 

Top