Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: மகளின் படிப்புக்காகப் பெற்ற தொகையை, 7 ஆண்டுக்குப் பின் அறநிறுவனத்திடம் திருப்பிக் கொடுத்த தந்தை

மலேசியாவின் பினாங்கு (Penang) மாநிலத்தில் அமைந்துள்ள House of Hope எனப்படும் ஓர் அறநிறுவனத்திற்குச் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் பினாங்கு (Penang) மாநிலத்தில் அமைந்துள்ள House of Hope எனப்படும் ஓர் அறநிறுவனத்திற்குச் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

7 ஆண்டுகளுக்கு முன், ஒரு பெண்ணின் படிப்புக்காக அந்த அறநிறுவனம் 460 வெள்ளி (1,400 ரிங்கிட்) கொடுத்து உதவியது.

அதைத் திருப்பி கொடுப்பதற்காக அந்தப் பெண்ணின் தந்தை அங்கு சென்றிருந்தார்.

அதே தொகையை அவர் திருப்பிக் கொடுத்ததாக அந்த அறநிறுவனத்தின் நிறுவனர் கூ செங் ஸீ (Khoo Cheng See) Malay Mail செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

அந்தத் தொகை, அவருடைய மகளின் படிப்புக்குத் தக்க சமயத்தில் உதவியதாக அவர் திரு. கூவிடம் குறிப்பிட்டார்.

தற்போது, அவருடைய மகள் கெடா (Kedah) மாநிலத்தில் ஒரு மருத்துவராகப் பணிபுரிகிறார்.

குடும்பத்தின் செலவுகளையும் தம்மையும், தமது மனைவியையும் மகள் பார்த்துக்கொள்வதாக அவர் திரு. கூவிடம் பெருமையுடன் சொன்னதாக Malay Mail தெரிவித்தது.

அவர் நன்றி மறவாமல் திருப்பிக் கொடுத்த பணம், உதவி தேவைப்படும் மற்ற பிள்ளைகளுக்கு உதவப் பயன்படுத்தப்படும் என்று திரு. கூ கூறினார்.

தங்கள் அறநிறுவனத்தின் மூலம் பலருக்கு உதவி வழங்கப்பட்டாலும், இப்படித் திரும்பக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒருவர் தங்களை ஆச்சர்யப்படுத்தியதாக அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்