Images
  • Period Badge
    (படம்: C1nC1nde/ Twitter)

ஜப்பான்: மாதவிடாய்க் காலத்திற்கு அடையாளச் சின்னத்தை அறிமுகப்படுத்திய கடை


ஜப்பான்: மாதவிடாய்க் காலத்தில் உள்ள ஊழியர்கள் அடையாளச் சின்னத்தை (badge) அணியலாம் என்று அறிவித்த ஒரு கடை அதைப் பற்றி மீண்டும் யோசிக்கவுள்ளது.

ஒசாக்கா பகுதியின் அங்காடித் தெருவில் ஒரு கடை, அடையாளச் சின்னத்தைக் கடந்த மாதம் அறிமுகம் செய்தது.

மாதவிடாய்க் காலத்தில் உள்ள ஊழியர்களுக்கு ஆதரவளிப்பது அதன் நோக்கம்.

அடையாளச் சின்னத்தை அணியும் ஊழியர்களுக்குக் கூடுதல் உதவியும், நீண்ட இடைவேளையும் வழங்கப்படும்.

இருப்பினும், முயற்சியை எதிர்த்துப் பெண் ஊழியர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.

தங்கள் மாதவிடாய்க் காலத்தை மற்றவர்களுக்கு அறிவிப்பதை அவர்கள் விரும்பவில்லை.

அதனைத் தொடர்ந்து, கடை அதன் கொள்கையை மாற்றி அமைக்கும் முயற்சியை எடுத்து வருகிறது.


Top