Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தவறுதலாகப் பூச்சிக்கொல்லி மருந்தைத் தலையில் பயன்படுத்திய ஆடவர்

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் வசிக்கும் ஓர் ஆடவர், தலைமுடிக்குப் பயன்படுத்தும் ஷாம்ப்பு என்று நினைத்து தவறுதலாகப் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தியதால் தமது தலைமுடியை அவர் இழக்க நேர்ந்தது.

வாசிப்புநேரம் -
தவறுதலாகப் பூச்சிக்கொல்லி மருந்தைத் தலையில் பயன்படுத்திய ஆடவர்

(படம்: TODAY)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

சீனாவின் தென்மேற்குப் பகுதியில் வசிக்கும் ஓர் ஆடவர், தலைமுடிக்குப் பயன்படுத்தும் ஷாம்ப்பு என்று நினைத்து தவறுதலாகப் பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்தியதால் தமது தலைமுடியை அவர் இழக்க நேர்ந்தது.

டைக்குலோரோவோஸ் (dichlorvos) எனும் அந்தப் பூச்சிக்கொல்லி மருந்து அதிக நச்சுத்தன்மை கொண்டது.

அதனை ஷாம்ப்பு இருக்கும் இடத்திற்கு அருகே வைத்திருக்கிறார் ஆடவர்.

இம்மாதத்தின் முற்பாதியில் மருந்தின் வாடையைக் கவனித்தபோதுதான் அவருக்குத் தம்முடைய தவறு தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து நடுக்கம், வியர்வை உட்பட பல்வேறு அறிகுறிகள் தோன்றத் தொடங்கின.

பூச்சிக்கொல்லி மருந்தைத் தலைமுடியிலிருந்து சொந்தமாக அகற்றும் முயற்சி பயனளிக்கமல் போக ஆடவர் யுன்னான் சீனப் பாரம்பரிய மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார்.

நஞ்சை அகற்றுவதற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவருடைய தலைமுடியை மழித்தனர்.

சரியான நேரத்தில் சிகிச்சை பெற்றதால் சில நாட்களில் அவர் முழுமையாய்க் குணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்