Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெட்ரோல் நிலைய வருமானத்தை எடுத்துச் சூதாடிய பெண்

சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மூழ்கி கொஞ்சம் எல்லைமீறிவிட்டார் பெட்ரோல் நிலைய நிர்வாகி ஒருவர். 

வாசிப்புநேரம் -

மலேசியா: சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் மூழ்கி கொஞ்சம் எல்லைமீறிவிட்டார் பெட்ரோல் நிலைய நிர்வாகி ஒருவர்.

நிலைய வருமானத்தின் ஒருபகுதியைத் தமது சூதாட்டப் பழக்கத்திற்குப் பயன்படுத்திய அவர் தற்போது கம்பி எண்ணி வருகிறார்.

58 வயதான அந்த மாது கடந்த செவ்வாய்க்கிழமை, அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் தம்மிடம் கொள்ளையடித்ததாகக் காவல்துறையிடம் புகார் கொடுத்தார்.

ஓர் உறையில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் நிலையப் பணமான சுமார்
30,000 ரிங்கிட் ரொக்கம் உள்ளிட்ட பொருள்களை ஆடவர் கொள்ளையடித்ததாக அவர் கூறியிருந்தார்.

ஆனால், புலனாய்வின்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கொடுத்தார்.

பெட்ரோல் நிலையத்தில் இருந்த கண்காணிப்புக் கேமரா ஒளிப்பதிவுகளைக் காவல்துறை சோதனையிட்டதில், பணம் கொள்ளைபோகவில்லை என்பது தெரியவந்தது.

பெண்ணைக் கைது செய்து விசாரித்ததில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்திலும், சூதாட்டத்திலும் பணத்தைச் செலவிட்டதை அவர் ஒப்புக்கொண்டார்.

சுமார் 16,000 ரிங்கிட் பணத்தை அவர் செலவழித்துவிட்டார்.

பெட்ரோல் நிலையத்தைச் சோதனையிட்டதில், சுமார் 19,000 ரிங்கிட் ரொக்கம் அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

தாம் கொள்ளையடிக்கப்பட்டதை நம்ப வைக்க, அந்த மாது தம் உடைமைகளைக் குப்பையில் தூக்கி எறிந்திருந்தார்.

மாது மீது இன்று (பிப்ரவரி 14) முறைப்படி குற்றஞ்சாட்டப்பட்டது.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்