Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முகக் கவசங்களைச் சுத்தம் செய்ய பெட்ரோலைப் பயன்படுத்துங்கள் - பிலிப்பீன்ஸ் அதிபர்

முகக் கவசங்களைச் சுத்தம் செய்ய பெட்ரோலைப் பயன்படுத்துங்கள் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே (Rodrigo Duterte) பரிந்துரைத்துள்ளார்.

வாசிப்புநேரம் -
முகக் கவசங்களைச் சுத்தம் செய்ய பெட்ரோலைப் பயன்படுத்துங்கள் - பிலிப்பீன்ஸ் அதிபர்

(கோப்புப் படம்: AP Photo/Aaron Favila)

முகக் கவசங்களைச் சுத்தம் செய்ய பெட்ரோலைப் பயன்படுத்துங்கள் என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டே (Rodrigo Duterte) பரிந்துரைத்துள்ளார்.

அதைத் தாம் கேலியாகச் சொல்லவில்லை என்றும் அவர் சொன்னார்.

முகக் கவசங்களைச் சுத்தம் செய்யும் ரசாயனங்கள் இல்லை என்றால், பெட்ரோலைப் பயன்படுத்தலாம் என்று திரு. டுட்டார்டே கடந்த வாரம் கூறியிருந்தார்.

அது நகைச்சுவையாகச் சொன்னது என்று அதிபரின் பேச்சாளர் கூறியதை அடுத்து, திரு. டுட்டார்டே அவ்வாறு கூறியுள்ளார்.

இருப்பினும் அவரின் கூற்று மருத்துவ ரீதியாகப் பரிந்துரைக்கப்படவில்லை என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.

பெட்ரோலைக் கிருமி நீக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அதை நுகர்ந்தால், சுவாசப் பிரச்சினைகள் எழலாம் என்று பிலிப்பீன்ஸ் மருத்துவச் சங்கம் கூறியது.

பிலிப்பீன்ஸில் சுமார் 90,000 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

2,000க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.

துணியால் செய்யப்பட்ட முகக் கவசங்களைச் சவர்க்காரம், தண்ணீர் ஆகியவற்றால் சுத்தம் செய்யலாம் என்றும் கிருமிநீக்கம் செய்வதற்காக 70 விழுக்காடு ethyl அல்லது isopropyl ரசாயனத்தைப் பயன்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்