Images
  • ph measles (1)
    (படம்: AFP/Noel Celis)

பிலிப்பீன்ஸில் தட்டம்மைத் தொற்று - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்வு

பிலிப்பீன்சில், தட்டம்மைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,300ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாண்டுத் தொடக்கம் முதல் அந்த எண்ணிக்கை கூடி வருகிறது.

குறைந்தது 70 பேர் அந்தத் தொற்றால் மடிந்தனர் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்களில் பெரும்பாலோர் தடுப்பூசி போடப்படாத குழந்தைகளும் சிறு பிள்ளைகளும்.

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் தட்டம்மைத் தொற்று ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சென்ற வாரம் அறிவித்தனர்.

அதன் பின்னர் லூஸோன் (Luzon) தீவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விசாயஸ் (Visayas) தீவுகளுக்கும் தட்டம்மைத் தொற்று பரவியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்குவதால் நோய்ப் பரவல் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். 

Top