Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அன்வார் பிரதமராக ஆதரவு தெரிவித்திருக்கும் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி

மலேசியாவின் எட்டாவது பிரதமராக திரு அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி, பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி உறுப்பினர்கள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

வாசிப்புநேரம் -
அன்வார் பிரதமராக ஆதரவு தெரிவித்திருக்கும் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி

Facebook/Anwar Ibrahim

மலேசியாவின் எட்டாவது பிரதமராக திரு அன்வார் இப்ராஹிம் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறி, பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இன்று இரண்டாம் நாளாக மலேசிய மாமன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துபேசினார்.

திரு அன்வாரின் PKR கட்சி, அவரைப் பிரதமர் பொறுப்புக்கு முன்மொழிந்திருப்பதாக மலேசிய ஊடகங்களிடம் தெரிவித்தது.

DAP, Parti Amanah கட்சிகளும் அவ்வாறே செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முன் தினம், பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது பதவி விலகியதைத் தொடர்ந்து, மாமனனர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சு நடத்திவருகிறார்.

இன்னும் சற்று நேரத்தில் PKR தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

மேல் விவரங்களுக்கு செய்தி இணையவாசலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்!


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்