Images
  • phil qk
    படம்: Brian Carl Fiedalan Pantilanan

பிலிப்பீன்ஸில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பிலிப்பீன்ஸின் குவீஸான் (Quezon) மாநிலத்தில்
5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அது பூமிக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும் அதன் தாக்கம் தலைநகர் மணிலாவிலும் உணரப்பட்டது என்றும் அமெரிக்கப் புவியியல் ஆய்வகம் தெரிவித்தது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மணிலாவில் உள்ள கட்டடங்களிலும் பள்ளிகளிலும் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சில பள்ளிகளும் கல்லூரிகளும் விடுமுறையை அறிவித்தன.

நிலநடுக்கம் தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன. 

Top