Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலீப்பின்ஸில் சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவமனை

பிலீப்பின்ஸில், சட்டவிரோதமாக ஒரு சிறிய மருத்துவமனை செயல்பட்டுவந்ததைக்  காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
பிலீப்பின்ஸில் சட்டவிரோதமாக இயங்கிய மருத்துவமனை

(படம்: AP)

பிலீப்பின்ஸில், சட்டவிரோதமாக ஒரு சிறிய மருத்துவமனை செயல்பட்டுவந்ததைக் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மணிலாவின் வட மேற்குப் பகுதியில் சுமார் 3 மாதங்களாக அந்த மருத்துவமனை ரகசியமாகச் செயல்பட்டு வந்தது

அந்த மருத்துவமனையில், கொரோனா கிருமித்தொற்று இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட
சீனக் குடிமக்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக அதிகாரிகள் கூறினர்.

மருத்துவமனையுடன் ஒரு மருந்துக் கடையும் அங்கே செயல்பட்டுவந்தது.

மருத்துவமனை ஒரு சொகுசு வீட்டை மாற்றியமைத்து உருவாக்கப்பட்டிருந்தது.

அதில் 7 நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

சோதனையின்போது இரண்டு பேர் கைதாயினர். வீட்டில் ஒரு நோயாளியும் இருந்தார்.

அவர் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றிவிடப்பட்டார்.

அந்த மருத்துவமனையில், 200க்கும் அதிகமான COVID-19 சோதனைக் கருவிகள் குப்பைத் தொட்டியில் கண்டெடுக்கப்பட்டன.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்