Images
  • Phil nun (1)
    (படம்: NICHOLAS KAMM/ AFP)

பிலிப்பீன்சில் ஆஸ்திரேலியப் பெண்துறவி கைது

பிலிப்பீன்சில் 71 வயது ஆஸ்திரேலியப் பெண்துறவி ஒருவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத அரசியல் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நாட்டின் பூசல்மிக்க தென்பகுதியில் மனித உரிமை மீறல் சம்பவங்களின் தொடர்பில் விசாரிக்கும் குழுவில் அவர் ஈடுபட்டிருந்ததாகவும் அதற்காக அவர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அவர் பிலிப்பீன்சிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரிஷியா ஃபாக்ஸ்(Patricia Fox) எனும் அந்தப் பெண்துறவி தமது வீட்டிலிருந்து தலைநகர் மணிலாவில் உள்ள குடிநுழைவுத் துறை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் மிதவாதக் குழுத் தலைவர் ரெனாட்டோ ரெயஸ்(Renato Reyes) அதனைத் தெரிவித்தார்.

அது நியாயமற்ற செயல் என்றும் அந்தப் பெண்துறவி குற்றவாளி அல்லர் என்றும் அவர் சொன்னார்.

பிலிப்பீன்சில் வெகுகாலம் வாழ்ந்திருக்கும் துறவி ஃபாக்ஸ் ஏழை எளியோருக்கு அதிக உதவிகள் செய்துவந்திருப்பதாகத் திரு ரெயஸ் தெரிவித்தார்.

மிண்டானவ் தீவில் விவசாயிகள் உள்ளிட்டோருக்கு மனிதாபிமான உதவிப் பணிகளில் துறவி ஃபாக்ஸ் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டதை பிலிப்பீன்ஸ் குடிநுழைவத் துறை உறுதிப்படுத்தியது.

உங்கள் கருத்து

Top