Images
  • duterte on SEA (1)
    (படம்: REUTERS/Lean Daval Jr./Files)

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேற பிலிப்பீன்ஸ் முடிவு

பிலிப்பீன்ஸ் அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அதிகாரபூர்வமாக வெளியேற முடிவெடுத்துள்ளது.

பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigue Duterte), போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மீது, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தத் தொடங்கியதை அடுத்து, பிலிப்பீன்ஸ் அரசாங்கம் அந்த முடிவை எடுத்தது.

அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு, பிலிப்பீன்ஸ் அரசாங்கம் ஒத்துழைக்காது என்று, பிலிப்பீன்ஸ் அதிபர் டுட்டார்ட்டே முன்னதாகக் கூறியிருந்தார்.

Top