Images
  • Philipines Covid2
    படம்: REUTERS

பிலிப்பீன்ஸ் எதிர்நோக்கும் இரண்டாவது அலைக் கிருமித்தொற்று

பிலிப்பீன்ஸில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,000-க்கு மேல் அதிகரித்துள்ளது.

இன்று புதிதாக 279 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டதோடு 5 பேர் மாண்டனர்.

9 நாள்களுக்கு பிறகு மீண்டும் அங்கு கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

பிலிப்பீன்ஸில், கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 13,221.
மாண்டோர் எண்ணிக்கை 842-க்கு அதிகரித்துள்ளது.

இன்று 89 பேர் உடல்நலம் தேறி வீடு திரும்பினர்.

இதுவரை மொத்தம் 2,932 பேர் முழுமையாக உடல்நலம் தேறியுள்ளனர்.

பிலிப்பீன்ஸ், ஜனவரி மாத முதல் அலைக்குப் பிறகு இப்போது இரண்டாம் அலைக் கிருமித்தொற்றை எதிர்நோக்குவது தெளிவாய்த் தெரிவதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Top