Images
  • philini
    ( படம்:  Reuters )

மங்கூட் சூறாவளியை எதிர்நோக்கத் தயாராகும் பிலிப்பீன்ஸ் மக்கள்

இன்னும் சிலமணி நேரத்தில் பிலிப்பீன்ஸின் வட பகுதியை மங்கூட் சூறாவளி தாக்கவுள்ளது.

புயலின் சீற்றத்தைக் கொண்டு சூறாவளி குறித்த எச்சரிக்கை நிலையை வானிலை ஆய்வாளர்கள் உயர்த்தியுள்ளனர்.

சூறாவளியால் அதிகப் பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

பலத்த மழையும் மணிக்கு 255 கிலோமீட்டர் என அசுர வேகத்தில் சுழலும் காற்றும் ஏற்படும் என அந்நாட்டின் லூஸோன் தீவில் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு பிலிப்பீன்ஸில் ஏற்பட்டுள்ள ஆகக் கடுமையான சூறாவளி இதுவாக இருக்கும் என கூறப்பட்டது.

ஏற்கனவே ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

சன்னல்கள் உடையாமல் பாதுகாப்பாக இருக்க ஒருசிலர் பலகைகளை அவற்றின்மேல் கட்டி வருகின்றனர்.

கடலோரப் பகுதிகளில் உள்ள தற்காலிக வீடுகள் அதிகம் பாதிப்படையக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தது 4 மில்லியன் பேர் சூறாவளியின் பாதையில் உள்ளதாகக் கணக்கிடப்பட்டது.

அடுத்ததாக அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவின் தென்பகுதியை வாரஇறுதியில் சூறாவளி தாக்கும் என முன்னுரைக்கப்பட்டது.

Top