Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸில் மீனவரைத் தாக்கிக் கொன்றது பெரிய முதலை

பிலிப்பீன்ஸின் தென்புறத்திலுள்ள பலபாக் (Balabac ) என்னும் தீவில், பெரிய உப்புநீர் முதலையொன்று மீனவரைத் தாக்கிக் கொன்றது.

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸில் மீனவரைத் தாக்கிக் கொன்றது பெரிய முதலை

(படம்: AFP/MIMAROPA POLICE/Handout)

பிலிப்பீன்ஸின் தென்புறத்திலுள்ள பலபாக் (Balabac ) என்னும் தீவில், பெரிய உப்புநீர் முதலையொன்று மீனவரைத் தாக்கிக் கொன்றது.

20 வயது மீனவர் தமது நண்பரோடு மீன்பிடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தபோது, படகிலிருந்த அவரை முதலை கவ்விச் சென்றதாக அதிகாரிகள் கூறினர்.

மறுநாள், முதலையின் வாயில் கவ்வப்பட்ட நிலையில் மீனவரின் உடலைக் கண்டதாகக் குடியிருப்பாளர்கள் கூறினர். பின்னர் வெடிகுண்டு வீசி முதலையைக் கொன்று அவர்கள் மீனவரின் உடலைக் கைப்பற்றினர்.

அதே வட்டாரத்தில் இரண்டு மாதங்களுக்குள், பத்து வயதுச் சிறுவன் ஒருவனையும் முதலை கொன்று தின்றது.

35 ஆயிரம் பேர் வாழும் அந்தத் தொலைதூரத் தீவில் சென்ற ஆண்டு முதலை தாக்கி இருவர் மாண்டனர்.

முதலைகள் ஒளிந்துவாழ வழியின்றி எல்லா இடங்களையும் மனிதர்கள் ஆக்கிரமித்துக் கொண்டதே அவற்றின் தாக்குதலுக்குக் காரணமென இயற்கை வல்லுநர்கள் கூறினர்.

அத்துடன், முதலைகள் கட்டுக்கடங்காமல் எண்ணிக்கையில் பெருகியிருக்கக் கூடுமென்றும் அஞ்சப்படுகிறது.

உணவுக்கும் வசிப்பிடத்துக்குமான போட்டியே முதலைகள் மனிதர்களைத் தாக்குவதற்குக் காரணமாகிறது என்று கூறப்படுகிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்