Images
  • typhoon
    (படம்:AP Photo/Aaron Favila)

பிலிப்பீன்ஸ் முன்னுரைப்பு : 24 மணி நேரத்தில் சூறாவளி தாக்கக்கூடும்

பிலிப்பீன்ஸை, இன்னும் 24 மணி நேரத்தில் மங்கூட் சூறாவளி தாக்கலாம் என்ற அச்சத்தால் பல்லாயிரக் கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.

இந்த ஆண்டு பிலிப்பீன்ஸைத் தாக்கவிருக்கும் ஆக வலுவான சூறாவளியாக அது கருதப்படுகிறது.

30க்கும் மேற்பட்ட இடங்களில் புயல் எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டுள்ளது.

கன மழையால், பெரு வெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியாளர்களும், துருப்பினரும் முழு விழிப்புநிலையில் உள்ளனர்.

தற்போதைக்கு அனைத்துலகச் சமூகத்திடமிருந்து உதவிகோரும் நிலை இல்லை என்று பிலிப்பீன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடார்ட்டே கூறியிருக்கிறார்.

ஹாங்காங்கிற்குச் சுமார் 100 கிலோமீட்டர் அருகில் மாங்கூட் சூறாவளி கடந்துசெல்லும் என்பதால், அங்கும் நிலைமை மோசமாகக்கூடும்.
 

Top