Images
  • crocodile
    படம்: AFP/Ted Aljibe

பிலிப்பீன்ஸில் சிறுவனைத் தின்ற முதலை

பிலிப்பீன்ஸில் படகில் இருந்த பத்து வயதுச் சிறுவனை முதலை ஒன்று தாக்கிக் கொன்று தின்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Balabac என்னும் நகருக்கு அருகே, தமது மூத்த உடன்பிறப்புகள் இருவரோடு அந்தச் சிறுவன் படகிலிருந்தான்.

அப்போது தண்ணீருக்குள் இருந்து திடீரெனத் தாவிய முதலை, சிறுவனைக் கவ்விச் சென்றது.

இரவு முழுவதும் தேடியும் சிறுவனை அவனது தந்தையால் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடந்த திங்கள்கிழமை (ஆக 12) சதுப்புநிலக் காட்டில் முதலை தின்றது போக எஞ்சிய சிறுவனின் பாதி உடலை மீனவர் ஒருவர் கண்டுபிடித்தார்.

பிலிப்பீன்ஸின் தென் பகுதியிலுள்ள Balabac நகர வட்டாரத்தில் உப்புநீர் முதலைகள் மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

வேகமான வளர்ச்சி காரணமாகவும் மக்கள் தொகைப் பெருக்கம் காரணமாகவும் முதலைகளின் வசிப்பிடங்கள் சுருங்கிக்கொண்டே வருவது அதற்கு ஒரு முக்கியக் காரணம்.

2015ஆம் ஆண்டிலிருந்து முதலைத் தாக்குதல் இடம்பெறாத ஆண்டே இல்லை என்கின்றனர் உள்ளூர் அதிகாரிகள்.

உலகின் ஆகப்பெரிய முதலை வகைகளில் ஒன்று உப்புநீர் முதலை. அவை ஆறு மீட்டர் நீளம் வரையிலும் வளரக்கூடியவை.

ஒரு டன் வரையிலும்கூட அவற்றின் எடை இருப்பதுண்டு.

கடந்த பிப்ரவரியில் இதே வட்டாரத்தில் நதியில் நீந்திக் கொண்டிருந்த 12 வயதுச் சிறுவனை ஒரு முதலை தாக்கியது.

ஆனால் சிறுவனின் உடன்பிறந்தோர் படகுத் துடுப்பால் முதலையின் தலையில் மாறிமாறித் தாக்கிச் சிறுவனை முதலை வாயிலிருந்து விடுவித்தனர்.


Top