Images
  • philippine evacuation (1)
    (படம்: REUTERS/Erik De Castro)

பிலிப்பீன்ஸை நோக்கி வரும் மங்காட் சூறாவளி - முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்லாயிரம் பேர் வெளியேற்றம்

பிலிப்பீன்ஸை நோக்கி வரும் மங்காட் (Mangkhut) சூறாவளியை முன்னிட்டு அந்நாட்டு அதிகாரிகள், பல்லாயிரம் பேரை பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றும் பணியை இன்று (செப்டம்பர் 13) தொடங்கியுள்ளனர்.

லூஸோன் (Luzon) தீவை மங்காட் சூறாவளி, வரும் சனிக்கிழமை தாக்கவுள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு பிலிப்பீன்ஸைத் தாக்கியுள்ள 15 புயல்களில் இதுவே ஆக வலுவானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவசர உதவி, மருத்துவ உதவி என வெவ்வேறு குழுக்கள் தயாராக உள்ளன.

மங்காட் சூறாவளியால் சுமார் 4.3 மில்லியன் மக்கள் பாதிப்படைவார்கள் என நம்பப்படுகிறது.

அதில் 800,000க்கும் அதிகமானோர் வறுமையில் வாடுபவர்கள்.

கரையோரம் வசிப்பவர்கள், ஏற்கனவே அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும், மற்றவர்கள் தகுந்த தகவலுக்காகக் காத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.






 

Top