Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

COVID-19 தடுப்பு மருந்துகளைக் கலந்து பயன்படுத்துவது குறித்து பிலிப்பீன்ஸ் சோதனை

பிலிப்பீன்ஸ் COVID-19 தடுப்பு மருந்துகளைக் கலந்து பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸ் COVID-19 தடுப்பு மருந்துகளைக் கலந்து பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

அதற்கான சோதனைகளை இவ்வாரத்தில் அல்லது அடுத்த மாதம் முதல் தொடங்க அது எண்ணம் கொண்டுள்ளது.

தடுப்பூசித் திட்டத்தை நாட்டு மக்களிடையே விரிவுபடுத்தவும் அதன் செயல்திறனை அதிகரிக்கவும் பிலிப்பீன்ஸ் முயற்சி செய்கிறது.

அப்படிச் செய்வதன் மூலம் மேலும் அதிகமான பொருளியல் செயல்பாடுகளை மீண்டும் தொடங்க முடியும் என அது நம்புகிறது.

தடுப்பூசி போடாத சுமார் 1,500 பேரிடம் சோதனைகள் நடத்தப்படவுள்ளன.

Sinovac தடுப்பு மருந்துடன் மற்ற COVID-19 தடுப்பு மருந்துகள் கலக்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறினர்.

பிலிப்பீன்ஸ் மக்கள்தொகையில் தடுப்பூசி போடத் தகுதியானவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

COVID-19 நோய்த்தொற்றால் தென் கிழக்காசியாவில் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிலீப்பீன்ஸூம் ஒன்று.

அங்கு சுமார் 2.8 மில்லியன் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர், கிட்டத்தட்ட 42,000 பேர் மாண்டனர்.

- Reuters/ng

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்