Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸ்: 30 செண்டிமீட்டர் பாதுகாப்பு இடைவெளி ஆபத்தானது - வல்லுநர்கள்

பிலிப்பீன்ஸின் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இனிமேல் 30 செண்டிமீட்டர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்தால் போதும் என்ற அரசாங்கத்தின் முடிவு, கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. 

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸ்: 30 செண்டிமீட்டர் பாதுகாப்பு இடைவெளி ஆபத்தானது - வல்லுநர்கள்

(கோப்புப் படம்: REUTERS / Eloisa Lopez)

பிலிப்பீன்ஸின் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் இனிமேல் 30 செண்டிமீட்டர் பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடித்தால் போதும் என்ற அரசாங்கத்தின் முடிவு, கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

அது 'ஆபத்தானது' என்று வல்லுநர்கள் சாடினர்.

இதற்கு முன்னர், பாதுகாப்பு இடைவெளி 1 மீட்டராக இருந்தது.

பாதுகாப்பான தூர இடைவெளியை, மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதால் கிருமித்தொற்று மேலும் தீவிரமடையும்
சாத்தியம் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்தனர்.

முகக் கவசம், முகத் தடுப்பு ஆகியவற்றை அணிந்தாலும்கூட பாதுகாப்பு இடைவெளியைக் குறைப்பது ஆபத்தானது என்று அவர்கள் தெரிவித்தனர்.

1 முதல் 2 மீட்டர்வரை என்பதுதான் அனைத்துலக அளவில் பின்பற்றப்படும் சரியான தூர இடைவெளி என்று மருத்துவர்கள் கூறினர்.

புதிய விதிமுறைகள் இன்று நடப்பிற்கு வந்தன.

பிலிப்பீன்ஸில் கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 260 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 4,630.

அங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 265,000-ஐத் தாண்டிவிட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்