Images
  • ph
    படம்: AFP

பிலிப்பீன்ஸ் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் மரணம்

பிலிப்பீன்ஸில் தற்கொலையாளியாகச் செயல்பட்டதாக நம்பப்படும் பெண் குண்டு வெடிப்பில் மாண்டு விட்டார்.

நேற்று பிலிப்பீன்ஸின் தென்பகுதியில் உள்ள ராணுவ முகாம் அருகே வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது சந்தேகத்துக்குரிய அந்தப் பெண் மாண்டார்.

பாதுகாப்பு அதிகாரிகளின் துரிதமான நடவடிக்கையால் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் அது அபு சய்யாஃப் கிளர்ச்சிக் குழுவின் கைவரிசையாக இருக்கலாம் என்று இராணுவம் சந்தேகிக்கிறது.

கடந்த 14 மாதங்களில் பிலிப்பீன்ஸின் தென்பகுதியில் 4 தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவை அந்த வட்டாரத்திலுள்ள ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தாக்கத்தைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.  

Top