Images
  • ph
    படம்: REUTERS

மலேசியா, தாய்லந்து ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை: பிலிப்பீன்ஸ்

பிலிப்பீன்ஸ், டெல்ட்டா வகைக் கிருமி பரவுவதைத் தடுக்க, மலேசியா, தாய்லந்து ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குத் தடை விதிக்கவுள்ளது.

அதிபரின் பேச்சாளர் அதனைத் தெரிவித்தார்.

வரும் 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதிவரை அந்தத் தடை நடப்பில் இருக்கும் என்றார் அவர்.

முன்னதாக, இந்தோனேசியா, இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்குப் பிலிப்பீன்ஸ் தடை விதித்திருந்தது.

Top