Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸில் இன்று சுமார் 3,000 பேருக்குக் கிருமித்தொற்று

பிலிப்பீன்ஸில் இன்று சுமார் 3,000 பேருக்குக் கிருமித்தொற்று

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸில் இன்று சுமார் 3,000 பேருக்குக் கிருமித்தொற்று

(படம்: REUTERS/Eloisa Lopez)

பிலிப்பீன்ஸில் இன்று சுமார் 3,000 பேருக்கு COVID-19 நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 2,987 பேருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது. 19 பேர் மாண்டனர்.

தற்போது பிலிப்பீன்ஸில் அதிக அளவில் மருத்துவச் சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், விரைவில் அடையாளம் காணப்பட்டு சமூக அளவில் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தலைநகர் மணிலாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நடப்பில் உள்ள கடுமையான முடக்கநிலை, ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படுமா என்பதுபற்றி, சரியான தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

பிலிப்பீன்ஸில் 139,538 பேருக்கு COVID-19 நோய் தொற்றியுள்ளது. மொத்தம் 2,312 பேர் மாண்டனர்.

தென் கிழக்கு ஆசியாவில் நோய்த்தொற்றால் ஆக மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக பிலிப்பீன்ஸ் உள்ளது.

இரண்டாவது இடத்தில் இந்தோனேசியா உள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்