Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸில் திருநங்கையைக் கொன்ற அமெரிக்க அதிகாரி நாடு கடத்தப்பட்டார்

பிலிப்பீன்ஸில் திருநங்கை ஒருவரைக் கொன்றதற்காகத் தண்டனை விதிக்கப்பட்ட   அமெரிக்கக் கப்பற்படை அதிகாரி, அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டேயின் மன்னிப்பை அடுத்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
பிலிப்பீன்ஸில் திருநங்கையைக் கொன்ற அமெரிக்க அதிகாரி நாடு கடத்தப்பட்டார்

படம்: REUTERS/Romeo Ranoco

பிலிப்பீன்ஸில் திருநங்கை ஒருவரைக் கொன்றதற்காகத் தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்கக் கப்பற்படை அதிகாரி, அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டேயின் மன்னிப்பை அடுத்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.

ஜோசஃப் ஸ்கோட் பெம்பேர்டன் (Joseph Scott Pemberton) இன்று காலை மணிலா அனைத்துலக விமான நிலையத்திலிருந்து அமெரிக்க ராணுவ விமானம் மூலம் வெளியேற்றப்பட்டார்.

இனி அவர் பிலிப்பீன்ஸ் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெம்பேர்டன், 2014ஆம் ஆண்டு ஜெனிஃபர் லாடே (Jennifer Laude) என்பவரை ஹோட்டல் அறையில் கொன்றதாக பிலிப்பீன்ஸ் நீதிமன்றத் தீர்ப்பு குறிப்பிட்டது. இப்போது அதிபர் அவருக்கு மன்னிப்பு வழங்கியது நீதியை அவமதிக்கும் செயல் என்று ஆர்வலர்கள் கண்டித்துள்ளனர்.

அமெரிக்க மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து COVID-19 தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் திரு. டுட்டார்ட்டே மன்னிப்பு வழங்கியிருக்கலாம் என்று அதிபரின் பேச்சாளர் கருத்துரைத்தார்.

அதனை நிராகரித்த பிலிப்பீன்ஸ் சுகாதார அமைச்சு, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் எந்தவித நிபந்தனையையும் விதிக்கவில்லை என்று கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்