Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

முன்னோடித் திட்டத்தின் கீழ் பிலிப்பீன்ஸில் மீண்டும் திறக்கவுள்ள 100க்கும் அதிகமான பள்ளிகள்

பிலிப்பீன்ஸில் 120 பள்ளிகள் வரை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸில் 120 பள்ளிகள் வரை மீண்டும் திறக்கப்படவுள்ளன.

கிருமிப்பரவல் தொடங்கியதிலிருந்து முதன்முறையாக, நேரடி வகுப்புகளில் கட்டுப்பாடுகளுக்கிணங்கப் பாடங்கள் நடத்தப்படவுள்ளன.

அதற்கான முன்னோடித் திட்டத்திற்கு பிலிப்பீன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டார்ட்டே (Rodrigo Duterte) ஒப்புதல் வழங்கியுள்ளார்.

சிறாரின் மனநலனைக் கருத்திற்கொண்டு அந்த முன்னோடித் திட்டம் நடப்புக்குக் கொண்டுவரப்படுவதாக திரு. டுட்டார்ட்டேயின் பேச்சாளர் விளக்கினார்.

அந்தத் தலைமுறையினர் மனத்தளவில் பாதிப்படைந்தால், காலப்போக்கில் பொருளியலும் பாதிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

திரு. டுட்டார்ட்டே அங்கீகரித்துள்ள கோட்பாடுகளின் கீழ், 2 மாத முன்னோடித் திட்டத்தில் சுமார் 100 அரசாங்கப் பள்ளிகள் பங்கு பெறவுள்ளன. அவை, கிருமித்தொற்று ஏற்படுவதற்குக் குறைவான சாத்தியம் உள்ள பள்ளிகள் எனக் கருதப்படுகின்றன.

மேலும் 20 தனியார் பள்ளிகளும் அதில் கலந்துகொள்ளலாம்.

முன்னோடித் திட்டத்தில் பாலர் பள்ளி முதல் தொடக்கநிலை 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், மேல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆகியோர் ஈடுபடுவர்.

ஆனால் வகுப்பில் செலவழிக்கும் நேரமும், மாணவர்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்