Images
  • storm
    (படம்: Gonzaga Municipal Disaster Risk Reduction and Management Office)

பிலிப்பீன்ஸில் சூறாவளி - 9 பேர் மரணம்

பிலிப்பீன்ஸில் வீசிய கடுமையான சூறாவளியால் குறைந்தது 9 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 பேர் காணவில்லை.

பிலிப்பீன்ஸின் பெரும்பாலான பகுதிகளில் கனத்த மழை பெய்தது. கிராமப்புறங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது.

சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Kompasu என்று பெயர் சூட்டப்பட்ட அந்தச் சூறாவளி லூஸோன் (Luzon) தீவில் அதிகச் சேதத்தை ஏற்படுத்தியது.

நிலச்சரிவில் மட்டும் 4 பேர் மாண்டனர். ஒருவர் நீரில் மூழ்கி மாண்டதாக தேசிய பேரிடர் அமைப்பு கூறியது.

முக்கியமான விரைவுச் சாலைகளும் பாலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.

இப்போது அவ்விடங்களில் வெள்ள நீர் வற்றத் தொடங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிலிப்பீன்ஸில் ஆண்டிற்குச் சராசரியாக 20 சூறாவளிகளாவது வீசும். அவற்றால் விவசாயம், வீடுகள், உள்கட்டமைப்பு வசதிகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.

- AFP/ad

Top