Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வூஹானைவிட அதிக நாள்கள் முடக்கப்பட்ட பிலிப்பீன்ஸ்....முடக்கம் விரைவில் தளருமா?

பிலிப்பீன்ஸின் கடுமையான  தனிமைப்படுத்தும் திட்டத்தைத் தளர்த்தும்படி அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டேயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
வூஹானைவிட அதிக நாள்கள் முடக்கப்பட்ட பிலிப்பீன்ஸ்....முடக்கம் விரைவில் தளருமா?

(கோப்புப் படம்: REUTERS/Eloisa Lopez)

பிலிப்பீன்ஸின் கடுமையான தனிமைப்படுத்தும் திட்டத்தைத் தளர்த்தும்படி அதிபர் ரொட்ரிகோ டுட்டார்டேயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்புப் பணிக்குழு அந்தக் கோரிக்கையை விடுத்தது.

பிலிப்பீன்ஸில் நோய்த்தொற்று எண்ணிக்கை இவ்வாரம் அதிகரித்தது. இருப்பினும், அந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிலிப்பீன்ஸ் 11 வாரங்களாக முடக்கப்பட்டுள்ளது.

இதனால், மக்களின் அன்றாட வாழ்வில் பல்வேறு தடங்கல்கள்.

கிருமிப்பரவல் முதலில் தோன்றிய சீனாவின் வூஹான் நகரம் முடக்கப்பட்டிருந்த காலத்தைவிட, அதிக நாள்கள் பிலிப்பீன்ஸ் முடக்கப்பட்டுவிட்டது.

கடந்த 34 ஆண்டுகளில் காணாத மிகப் பெரிய பொருளாதாரச் சரிவை இவ்வாண்டு பிலிப்பின்ஸ் எதிர்நோக்குகிறது.

பொருளாதார வளர்ச்சிக்குத் துணைபுரியும் பல துறைகளை மீண்டும் திறக்கவேண்டியுள்ளது என்று அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்