Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியோர் வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதி

பிலிப்பீன்ஸில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியோர் வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதி

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸில், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியோர் வீட்டிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற முதியோரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அது ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் தடுப்பூசி போடும் இலக்குகளை எட்டவும் அதிகாரிகளுக்கு அது உதவும்.

வரும் புதன்கிழமையிலிருந்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட இடங்களில் வசிக்கும் முதியோர் வெளியே செல்லலாம்.

ஆயினும் அவர்கள் முகக்கவசமும் முகக்காப்பும் அணிந்திருக்க வேண்டும்.

எல்லா நேரங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

பிலிப்பீன்ஸில், கோவிட்-19 கிருமியால் மாண்டோரில் பெரும்பாலானோர் முதியவர்கள்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய அந்நாட்டின் தடுப்பூசி போடும் திட்டத்தில் முதியோருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுகிறது.

ஆனால், இம்மாதம் ஆறாம் தேதி நிலவரப்படி, அந்நாட்டின் மூத்தோரில் 16 விழுக்காட்டினர் மட்டுமே முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.

பிலிப்பீன்ஸ் மக்கள்தொகையில் 9 மில்லியனுக்கும் மேற்பட்டோர் மூத்த குடிமக்கள். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்