Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தாய்லந்து அரசாங்கத்திடம் 148 மில்லியன் டாலர் நிதியுதவி கேட்டுள்ள புக்கெட் தீவு சுற்றுலா முகவர்கள்

தாய்லந்து புக்கெட்  தீவின் சுற்றுலா முகவர்கள், அரசாங்கத்திடம் 148 மில்லியன் டாலர் நிதியுதவி கோருகின்றனர். 

வாசிப்புநேரம் -

தாய்லந்து புக்கெட் தீவின் சுற்றுலா முகவர்கள், அரசாங்கத்திடம் 148 மில்லியன் டாலர் நிதியுதவி கோருகின்றனர்.

கண்ணைக் கவரும் வகையில் வர்த்தகத் தலங்களை மேம்படுத்தவும், உள்ளூர் சமூகங்களுக்கு ஆதரவளிக்கவும் அந்த நிதி உதவும்.

கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதன் மூலம், வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்க அதிகாரிகள் திட்டமிடுகின்றனர்.

டிசம்பருக்குள், நாள்தோறும் வெளிநாட்டுப் பயணிகள் 10,000 பேரை வரவழைக்க திட்டமிடப்படுகிறது.

முன்னோடிச் சுற்றுலாத் திட்டத்தின் கீழ், ஜூலையிலிருந்து இதுவரை 42,000 சுற்றுப்பயணிகள் புக்கெட் தீவுக்குச் சென்றுள்ளனர்.

அதன் மூலம் தாய்லந்துப் பொருளியலுக்கு 59 மில்லியன் டாலர் வருவாய் கிட்டியுள்ளது.

அடுத்த மாதத்திலிருந்து, பேங்காக், சியாங் மாய் உள்ளிட்ட பகுதிகளை வெளிநாட்டுப் பயணிகளுக்குத் திறக்கத் தாய்லந்து அரசாங்கம் திட்டமிடுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்