Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சுற்றுலாவிற்கு முதன்மை-தடுப்பூசி போடுவதில் புக்கெட்டிற்கு முன்னுரிமை

தாய்லந்தில், முன்னணிச் சுற்றுலாத் தலமான புக்கெட்டிற்கு முன்னுரிமை கொடுத்து, COVID-19 தடுப்பூசி போடும் பணி அங்கு பெரிய அளவில் தொடங்கப்படவுள்ளது.

வாசிப்புநேரம் -

தாய்லந்தில், முன்னணிச் சுற்றுலாத் தலமான புக்கெட்டிற்கு முன்னுரிமை கொடுத்து, COVID-19 தடுப்பூசி போடும் பணி அங்கு பெரிய அளவில் தொடங்கப்படவுள்ளது.

புக்கெட் நிர்வாகம், 460,000 பேருக்குத் தடுப்பூசி போடத் திட்டமிடுகிறது. அது, கிட்டத்தட்ட அந்தத் தீவின் மொத்த மக்கள்தொகைக்குச் சமம்.

சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்க்கும் பகுதி என்பதால், தடுப்பூசி போடுவதில் புக்கெட்டுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 1ஆம் தேதி முதல், தடுப்பூசி போட்டுக்கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் புக்கெட்டுக்குச் சென்றால், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையில்லை.

அதற்கு ஏதுவாக, தீவிலுள்ள 70 முதல் 80 விழுக்காட்டினருக்குத் தடுப்பூசி போட்டுக் கூட்டுத் தடுப்பாற்றலை உருவாக்க, தாய்லந்து திட்டமிடுகிறது.

தாய்லந்துப் பொருளியலில், சுற்றுலாத்துறையின் பங்கு கணிசமானது.

COVID-19 நோய்த்தொற்றால் அங்கு சுற்றுலாத் துறை பெருத்த இழப்பைச் சந்தித்துவருகிறது.

கிருமித்தொற்றுக்கு முன், தாய்லந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெளிநாட்டுப் பயணிகளின் பங்களிப்பு சுமார் 12 விழுக்காடு.

கிருமிப்பரவலால் சென்ற ஆண்டு அங்கே, 1.45 மில்லியன் பேர் வேலைகளை இழக்க நேரிட்டது.


-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்