Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பசியால் தவிக்கும் குரங்குகளுக்கு இசை ஆறுதல் தருமா??

பசியால் தவிக்கும் குரங்குகளுக்கு இசை ஆறுதல் தருமா??

வாசிப்புநேரம் -

பிரிட்டிஷ் இசைக்கலைஞர் பால் பார்ட்டன் (Paul Barton), பசியால் வாடும் குரங்குகளுக்கு பியானோ (piano) இசை மூலம் ஆறுதல் தரும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுவருகிறார்.

தாய்லந்தில் உள்ள குரங்குகளுக்குச் சுற்றுப்பயணிகள் உணவு கொடுப்பது வழக்கம்.

கொரோனா நோய்ப்பரவல் காலக்கட்டத்தில் சுற்றுப்பயணிகள் இல்லாததால் குரங்குகள் உணவின்றி, பசியோடு கட்டுக்கடங்காமல் அலைமோதுவதைக் காணலாம்.

"அவை நேரத்திற்குச் சாப்பிடும்போது இவ்வாறு கட்டுக்கடங்காமல் நடந்துகொள்ளமாட்டா" என 59 வயது பார்ட்டன் குறிப்பிட்டார்.

தாய்லந்தில் நீண்டகாலம் வாழும் பார்ட்டன், இதுவரை லொப்புரியில் உள்ள நான்கு இடங்களில் பியானோ வாசித்துள்ளார்.

பார்ட்டன், பெத்தோவன் அமைத்த இசையை குரங்குகளுக்கு வாசித்து வருகிறார்.

அவர் வாசிக்கும் இசையைக் கேட்ட உடனே குரங்குகள் மகிழ்ச்சியாக அவர் அருகே சென்று, அவர் தோளில் ஏறி தலையைத் தொட்டு, அவர் அருகில் அமர்ந்துகொள்வதைக் காணலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்