Images
  • Rabbit
    படம்: AFP/Mark Ralston

பிரபல மிட்டாயில் மாடு, பன்றி மரபணுக்கள் உள்ளன: மலேசியா

பிரபல மிட்டாயான White Rabbit-இல் மாடு, பன்றி மரபணுக்கள் உள்ளதாக மலேசியப் பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த துணையமைச்சர் புஸியா சாலே (Fuziah Salleh) தெரிவித்துள்ளார்.

மிட்டாயின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அதில் மாடு, பன்றி மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

மிட்டாய் சீனாவைச் சேர்ந்தது என்றும், அதற்கு ஹலால் சான்றிதழ் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மிட்டாயில் ஜெலட்டின் (Gelatin) இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

கடந்த சில வாரங்களாக White Rabbit மிட்டாய்க்கு ஹலால் சான்றிதழ் இல்லை என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.

அண்மையில் புரூணையிலும் அந்த மிட்டாய் தொடர்பாகச் சர்ச்சை எழுந்தது.

உண்ணும் உணவுகளில் என்னென்ன பொருள்கள் கலக்கப்படுகின்றன என்பதை மக்கள் தெரிந்து வைத்திருக்கவேண்டும் என்று மலேசிய அமைச்சர் கூறினார்.



Top