Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் - 51 பேர் காயம்

பிலிப்பீன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 51க்கும் மேற்பட்டவர்கள் கடும் காயமடைந்தனர்.

வாசிப்புநேரம் -

பிலிப்பீன்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 51க்கும் மேற்பட்டவர்கள் கடும் காயமடைந்தனர்.

பிலிப்பீன்ஸின் தெற்கில் அமைந்திருக்கும் மிண்டனாவ் (Mindanao)தீவுன் வடகிழக்கு கரையோரத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 4 மணியளவில் உலுக்கியது.

அந்தப் பகுதியில் வீடுகள், தேவாலயங்கள் உட்பட பல கட்டடங்கள் சேதமடைந்தன.

வீடுகளிலிருந்து மக்கள் விரைந்து வெளியேறியதாகவும் வீடுகளின் சுவர்கள் வெடிக்கத் தொடங்கியதாகவும் ஒரு காவல்துறை அதிகாரி AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

Madrid District மருத்துவமனையிலிருந்தும் நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

அதிக நில அதிர்வுகள் ஏற்படும் ஆபத்தான நெருப்பு வளையப் பகுதியில் அமைந்திருக்கும் பிலிப்பீன்ஸில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவதுண்டு.

கடந்த ஏப்ரல் மாதம் மணிலாவின் வடக்கில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 11 பேர் மாண்டனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்