Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: இளஞ்சிவப்பு நிறத்தில் சுழல் காற்று

மலேசியாவின் ஜொகூரில் இளஞ்சிவப்பு நிறத்தில் சுழல் காற்று காட்சியளித்தது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியா: இளஞ்சிவப்பு நிறத்தில் சுழல் காற்று

(படம்: Facebook sceengrabs/ We are Malaysians)


மலேசியாவின் ஜொகூரில் இளஞ்சிவப்பு நிறத்தில் சுழல் காற்று காட்சியளித்தது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புயல் காற்று தொடர்பான காணொளி Facebook-இல் கடந்த ஞாயிறுக்கிழமை (செப்டம்பர் 29) பதிவேற்றப்பட்டது.

பெங்கராங் நகரில் உள்ள எண்ணெய்ச் சுத்தகரிப்பு ஆலைக்கு அருகே இந்தக் காட்சி தென்பட்டது.

காணொளியில் ஒரு வானமோட்டி தூரத்தில் சுழன்றுகொண்டிருந்த புயல் காற்றை நோக்கிச் செல்கிறார்.

புயல் காற்று இளஞ்சிவப்பு நிறத்தில் தென்படுகிறது.

தொழிற்சாலை ரசாயன மாசு காரணமாக அந்த நிறம் உருவாகியிருக்கலாமென ஒருவர், கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜொகூர் பாருவிலும் இரண்டு வாரங்களுக்குமுன் இதேபோன்ற வண்ணச் சுழல் காற்று தென்பட்டதாக மற்றொருவர் குறிப்பிட்டார்.

காணொளி இதுவரை சுமார் 14,000 முறை பகிரப்பட்டுள்ளது.

வெப்பம் மிகுந்த நாள்களில், நிலத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிகளை விட அதிக வேகமாக வெப்பமடையும்போது சுழல் காற்று உருவாவதாக நம்பப்படுகிறது.



 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்