Images
  • palm
    (படம்:  Reuters/Roni Bintang)

இந்தோனேசியாவில், தோட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட 1.4 மில்லியன் ஹெக்டர் வனப்பகுதியை அரசாங்கம் திரும்பப் பெறக்கூடும்

இந்தோனேசியாவில், செம்பனைத் தோட்டத்துக்காகக் காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் உத்தரவின்கீழ், 1.4 மில்லியன் ஹெக்டர் வனப்பகுதி மீட்டுக்கொள்ளப்படக்கூடுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

புதிதாக செம்பனைத் தோட்டங்கள் உருவாக்கப்படுவதற்கு, சென்ற ஆண்டு அதிபர் ஜோக்கோ விடோடோ தடை விதித்தார். காடுகளை அழிக்காமல் காப்பது அதன் நோக்கம்.

அந்த உத்தரவின்மூலம், ஏற்கனவே தோட்டங்களை உருவாக்குவதற்கு வழங்கப்பட்ட உரிமங்களைப் பரிசீலனை செய்யும் அதிகாரம் அதிகாரிகளுக்குக் கிடைத்தது.

உரிமம் வழங்கப்பட்ட இடங்களில் இன்னமும் மரங்கள் வெட்டப்படாமல் இருந்தால் அந்த உரிமத்தை மீட்டுக்கொள்ள முடியும். 5.8 மில்லியன் ஹெக்டர் பரப்பளவுள்ள இடத்தில் தோட்டங்களை உருவாக்க உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அதில் இன்னமும் 1.4 மில்லியன் ஹெக்டர் நிலத்தில் தோட்டங்கள் உருவாக்கப்படாமல் மரங்கள் உள்ளன.

அந்த இடங்களைச் சுற்றுப்புற அமைச்சு பார்வையிட்டுத் தன் முடிவைத் தெரிவிக்கும். அங்குள்ள மரங்களைப் பாதுகாக்க அமைச்சு உத்தரவிட்டால், அந்த நிலத்தை அரசாங்கம் மீட்டுக்கொள்ளும்.  

Top