Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பெருங்கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதைத் தவிர்க்க உதவும் 106 மில்லியன் டாலர் நிதி

தென்கிழக்காசிய, தெற்காசிய வட்டாரங்களில் உள்ள பெருங்கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதைத் தவிர்க்க உதவும் புதிய நிதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பெருங்கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதைத் தவிர்க்க உதவும் 106 மில்லியன் டாலர் நிதி

(படம்: FP/Juni Kriswanto)

தென்கிழக்காசிய, தெற்காசிய வட்டாரங்களில் உள்ள பெருங்கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதைத் தவிர்க்க உதவும் புதிய நிதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூரைச் சேர்ந்த முதலீட்டு நிறுவனமான Circulate Capital, பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க 106 மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ளது.

Coca-Cola, PepsiCo, Procter and Gamble, Unilever உள்ளிட்ட 8 பெரு நிறுவனங்கள் அந்த நிதிக்குப் பங்களிக்கவுள்ளன.

உலகளாவிய பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அந்த நிறுவனங்களே பெரிதும் காரணமாக உள்ளன.

தனியார்துறை முதலீட்டுக்கும், ஆசியக் கழிவுத் துறைத் தேவைக்கும் இடையிலான நிதி இடைவெளியை நிரப்ப, புதிய நிதி பயன்படுத்தப்படும்.

சீனா, இந்தோனேசியா, பிலிப்பீன்ஸ், வியட்நாம், இலங்கை ஆகிய 5 ஆசிய நாடுகளே பெருங்கடலில் ஆக அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டுகின்றன.

அதன் காரணமாக ஆசிய பசிபிக் வட்டாரத்தைச் சேர்ந்த மீன்பிடித் துறை, கப்பல்துறை, பயணத்துறை ஆகியவை பாதிக்கப்படுகின்றன.

ஆண்டுதோறும் அதனால் சுமார் 1.3 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்படுகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளுக்குக் காரணமான நாடுகள் அதை முறையாக அப்புறப்படுத்தவும், மறுசுழற்சிக்கு உட்படுத்தவும் புதிய நிதியின்கீழ் உதவி வழங்கப்படும்.

அதன்மூலம், பெருங்கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளைக் குறைக்க முடியுமென நம்பப்படுகிறது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்