Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிளாஸ்டிக் குப்பைக்கு ஏழ்மை ஒரு காரணமா?

பிலிப்பீன்ஸின் Freedom தீவில் யாரும் வசிப்பதில்லை, ஆனால் அதன் கரையோரங்களில் தினமும் குப்பை குவிகிறது.

வாசிப்புநேரம் -
பிளாஸ்டிக் குப்பைக்கு ஏழ்மை ஒரு காரணமா?

(படம்: Reuters)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

பிலிப்பீன்ஸின் Freedom தீவில் யாரும் வசிப்பதில்லை, ஆனால் அதன் கரையோரங்களில் தினமும் குப்பை குவிகிறது.

மெட்ரோ மணிலாவுக்கு அருகே உள்ள இந்தத் தீவிற்கு, மணிலாவின் குப்பைக் கூளங்கள் போய்ச் சேர்கின்றன.

அங்கிருக்கும் குப்பையில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய காப்பித்தூள், சலவைத்தூள், பற்பசைப் பொட்டலங்கள்தான் அதிகம் உள்ளன.

அவற்றைப்போன்று பிலிப்பீன்ஸில் ஒவ்வொரு நாளும் சுமார் 163 மில்லியன் பிளாஸ்டிக் பொட்டலங்கள் குப்பையில் வீசப்படுகின்றன.

பிலிப்பீன்ஸின் மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினர் ஏழ்மையில் உள்ளனர்.

அவர்கள் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய அளவில் பொட்டலமிட்டு விற்கப்படும் பொருள்களை அதிகம் வாங்குகின்றனர். அந்தப் பொருள்கள் மலிவாக உள்ளது அதற்குக் காரணம்.

இதனால், பிளாஸ்டிக் குப்பை அதிகம் சேருகிறது.

சுற்றுப்புற ஆய்வாளர்கள், இந்தப் பொட்டலங்களைத் தொடர்ந்து தயாரிக்கும் நிறுவனங்கள்தான் இதற்குக் காரணம் என்று கூறுகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்