Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிளாஸ்டிக் குப்பையினால் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு

இந்தோனேசியாவின் பாங்குன் (Bangun) தீவில் பிளாஸ்டிக் குப்பை வெறும் குப்பையாக இருந்துவிடுவதில்லை; பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாக மாறுகிறது.

வாசிப்புநேரம் -
பிளாஸ்டிக் குப்பையினால் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு

(படம்: AFP)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

இந்தோனேசியாவின் பாங்குன் (Bangun) தீவில் பிளாஸ்டிக் குப்பை வெறும் குப்பையாக இருந்துவிடுவதில்லை; பணம் சம்பாதிக்கும் வாய்ப்பாக மாறுகிறது.

சீனா வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் குப்பைகளை ஏற்றுக்கொள்வதை இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நிறுத்திவிட்டது.

அதனைத் தொடர்ந்து, ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களின் கழிவு, உலகின் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது.

நாடுகள் குப்பையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியாமல் தவிக்கின்றன.

ஆனால், பாங்குன் மக்களில் 60 விழுக்காட்டினார் பிளாஸ்டிக் குப்பையைக்கொண்டு பணம் சம்பாதிக்கின்றனர்.

(படம்: AFP)

குப்பையிலிருந்து போத்தல்கள், பொட்டலங்கள், குவளைகள் ஆகியவற்றைப் பிரித்தெடுத்து உள்ளூர் நிறுவனங்களுக்கு அனுப்புகின்றனர்.

அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு பிள்ளைகளை அவர்கள் படிக்க வைக்கின்றனர்.

பாங்குன் தீவின் ஏழைமக்கள் துணிமணி வாங்குவதற்கும் குப்பைகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியிருக்கின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்