Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ததாக இரண்டு சிங்கப்பூரர்கள் மீது இந்தோனேசியா குற்றச்சாட்டு

இந்தோனேசியாவுக்குள் உரிய உரிமமின்றி 87 கொள்கலன்களில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ததாக இரண்டு சிங்கப்பூரர்கள் மீது ஜக்கர்த்தா குற்றஞ்சாட்டியுள்ளது.

வாசிப்புநேரம் -
பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ததாக இரண்டு சிங்கப்பூரர்கள் மீது இந்தோனேசியா குற்றச்சாட்டு

(படம்: AFP/Juni Kriswanto)

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

இந்தோனேசியாவுக்குள் உரிய உரிமமின்றி 87 கொள்கலன்களில் பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ததாக இரண்டு சிங்கப்பூரர்கள் மீது ஜக்கர்த்தா குற்றஞ்சாட்டியுள்ளது.

கப்பல் கொள்கலன்களில் வெளிநாட்டுக் கழிவுகளை இறக்குமதி செய்யும் முயற்சிகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை இந்தோனேசியா தீவிரப்படுத்தியுள்ளது.

இந்தோனேசிய சுங்கத்துறையில் கண்காணிப்பை அது பலப்படுத்தியுள்ளது. PT Advance Recycle Technology நிறுவனத்தின் இயக்குநராகவும் ஆணையராகவும் அந்த இரண்டு சிங்கப்பூரர்கள் செயல்பட்டனர்.

ஜாவா தீவில் உள்ள பான்டேன் மாநிலத்தைத் தளமாகக் கொண்ட மறுபயனீட்டு நிறுவனம் அது. அவர்களின் முழுமையான பெயர்கள் வெளியிடப்படவில்லை.

அவர்கள் ஹாங்காங், ஸ்பெயின், கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகியவற்றிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இவ்வாண்டு மே மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர்கள் அந்த பிளாஸ்டிக் கழிவுகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படுகிறது.

கழிவுகளை உள்ளடக்கிய கொள்கலன்கள் சிலவற்றில், நச்சுத்தன்மை மிக்க மின்னியல் கழிவுகள் இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்