Images
  • wang yi
    (படம்: Reuters)

'நெருப்புடன் விளையாட வேண்டாம் '- சீனா அமெரிக்காவிடம் எச்சரிக்கை

சீனாவின் வெளியுறவு அமைச்சர், தைவான் விவகாரம் தொடர்பில் 'நெருப்புடன் விளையாட வேண்டாம் ' என்று அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

இரண்டு பில்லியன் டாலருக்கு மேல் மதிப்புள்ள ஆயுதங்களைத்
தைப்பேக்கு விற்கும் திட்டத்தை வாஷிங்டன் அறிவித்ததைத் தொடர்ந்து சீனாவின் கடுமையான அறிவிப்பு வந்துள்ளது.

தைவானிய அதிபர் சாய் இங்-வென் (Tsai Ing-wen)
மேற்கொள்ளும் கரிபியன் (Caribbean) பயணத்தின் இடையே
அமெரிக்காவிற்குச் செல்வது பற்றி, ஹங்கேரியில் (Hungary) தற்போது இருக்கும் சீன வெளியுறவு அமைச்சர்
வாங் யி (Wang Yi) கருத்துரைத்துள்ளார்.

இத்தகைய நிகழ்வுக்கு வழங்கப்படும் ஆதரவைச் சீனா எதிர்ப்பதாகவும் அது உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்றும் அவர் கூறினார்.

சீனா, தைவானுக்கு ஆயுதங்களை விற்க திட்டமிட்டுள்ள அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிரான தடைகளை விதித்துள்ளது.  

Top