Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வதை மலேசியா ஏற்றுக்கொள்ளாது : பிரதமர் மகாதீர்

மலேசியா, ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வதை ஏற்றுக்கொள்ளாது என்பதைப் பிரதமர் மகாதீர் முகமது வலியுறுத்தியிருக்கிறார்.

வாசிப்புநேரம் -
ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வதை மலேசியா ஏற்றுக்கொள்ளாது : பிரதமர் மகாதீர்

(படம்: Bernama)

மலேசியா, ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வதை ஏற்றுக்கொள்ளாது என்பதைப் பிரதமர் மகாதீர் முகமது வலியுறுத்தியிருக்கிறார்.

பாரம்பரிய திருமண முறையை அவர் தற்காத்துப் பேசினார்.

ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வது பின்னோக்கிச் செல்லும் சிந்தனை என அவர் வருணித்தார்.

மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு அனுமதி அளிக்க முடியாது என்றார் டாக்டர் மகாதீர்.

ஒரே பாலினத்தவர் திருமணம் செய்துகொள்வதையும், ஓரினச் சேர்க்கையாளர் போக்கையும் அவர் தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளார்.

அத்தகைய மேற்கத்தியப் பண்புகளை மலேசியா பின்பற்றுவதில்லை என அவர் சொன்னார்.

சில போக்குகளை மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகளாக ஏற்றுக்கொண்டாலும், மலேசியா அவற்றை ஏற்றுக்கொள்ளாது என்பதைப் பிரதமர் மகாதீர் வலியுறுத்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்