Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி உதவியளிப்பதாக உறுதி

இந்தியா:  சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி உதவியளிப்பதாக உறுதி

வாசிப்புநேரம் -
இந்தியா: சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட பிரதமர் மோடி உதவியளிப்பதாக உறுதி

படம்: REUTERS

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி Amphan சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிட்டார்.

சூறாவளியால் கொல்கத்தா ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியின்போது வீசிய பலத்த காற்றும், பொழிந்த கனத்த மழையும் பலரின் இருப்பிடங்களை உடைத்தெறிந்தது.

மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து மக்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்கும் என்று திரு. மோடி தெரிவித்தார்.

தற்போது அந்நகரில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பலத்த காற்றின் காரணமாக 10,000-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன.

பங்களாதேஷிலும் Amphan சூறாவளியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இரு நாடுகளிலும் சேர்த்து, சூறாவளிக்குப் பலியானோர் எண்ணிக்கை 96-க்கு அதிகரித்துள்ளது.

வரும் நாள்களில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

சூறாவளி காரணமாக சுமார் 3 மில்லியன் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்