Images
  • 061117 - virus (1)
    (படம்:Pixabay/qimono)

நிமோனியா காய்ச்சல் : ஹாங்காங்கில் உச்ச விழிப்பு நிலை

ஹாங்காங்கில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நிமோனியா காய்ச்சலுக்கான அறிகுறி கண்டறியப்படவில்லை என்று தலைமை நிர்வாகி கேரி லாம் அறிவித்துள்ளார்.

இருப்பினும், தமது அரசாங்கம் உச்ச விழிப்பு நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

ஹாங்காங் நிபுணர் குழு சீனாவின் வூஹான் நகருக்குச் சென்றுள்ளதாக கூறிய திருமதி லாம், நாளை அவர்கள் அங்குள்ள சுகாதார அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதாக கூறினார்.

கோரோனா (Corona) கிருமியால் பரவி வரும் நோய்த் தொடர்பான தகவல்களைப் பெறுவதுடன் அதைத் தடுப்பதற்கான விவரங்களையும் அந்த நிபுணர்கள் பெற்றுக்கொள்வர். 

Top